சோர்வா தளர்ந்த நடையுடன் வீட்டுக்குள் நுழைந்த ராகாவைப் பார்த்து,
"என்னாச்சும்மா, உடம்பு சுகமில்லையா?" கேட்டது அவள் மகள் சாம்பவி.
அப்படியே சோபாவில் சரிந்தவள் "கொஞ்சம் தண்ணீர் தரியா செல்லம், சொல்றேன்," என இறைஞ்சினாள்.
நீரைக் கொடுத்து விட்டு காலடியில் அமர்ந்து மெதுவாக காலைப் பிடிக்கத் தொடங்கினாள்.
"இருபத்தி இரண்டு வயது வரை என் அப்பா அம்மாவின் மகளாக இருந்தேன் கவலையின்றி அவர்கள் பேச்சைக் கேட்டு."
"பின் உன் அப்பாவுக்கு மனைவியாகி, அடுத்த ஆண்டே உனக்குத் தாயானேன். வீட்டில் குடும்பத்தலைவி. அலுவலகத்தில் அதிகாரி."
"எல்லா இடத்திலும் அவரவர் தேவைக்கேற்ப முகம் மாறி மாறி, இப்போ என் சுயமுகம் எனக்கே மறந்து போய் கையறுநிலையில் தவிக்கிறேன்டா," கண்ணா.