
கிராமத்து மாலை வெயில், மெர்லினையும் அவள் தோள்வரை வளர்ந்திருந்த கதிர்களையும் ஆரஞ்சு நிறத்தில் குளிப்பாட்டிக்கொண்டிருந்தது.
எஸ்தர் சித்திதான் அப்பா திடீரெனத் தவறிவிட்ட செய்தியைத் தெரிவித்திருந்தாள்.
மெர்லின் கல்லூரிப் படிப்பை முடித்து, வெளியூரில் வேலைக்குப் போனபோது, அம்மா இறந்துவிட, தனிமையில் அப்பா.
தன்னுடன் பணி புரியும் எஸ்தரைத் திருமணம் செய்துகொள்ள அப்பா விரும்பியபோது, மெர்லின் கோபம் கொண்டு, வெளியூரிலேயே தங்கி விட்டாள்.
அப்பாவும் எஸ்தர் சித்தியும் எவ்வளவு அழைத்தும் ஏற்கவில்லை மெர்லின்.
இதே போன்ற மாலை வெயிலில் அப்பா அனுமதி கேட்ட அதே இடத்தில் இன்று, தனியாக அப்பாவின் நினைவுகளை நெஞ்சில் சுமந்தவாறு நடந்து கொண்டிருக்கிறாள் மெர்லின். அப்பவின் வாசம் எங்கும்.
அவள் போட்டுக்கொண்டிருந்த அப்பாவின் கோட்டு காற்றில் ஆடியபடி கேட்பது போலிருந்தது.
“தனிமை கொடுமைதானே மெர்லின், அதுவும் வயதான காலத்தில்.”
கோட்டை இறுகத் தழுவிக் கொண்ட மெர்லினில் கண்களில் கசிந்த கண்ணீர், மஞ்சள் சூரியனை மறைத்தது.
