விஞ்ஞானி/ஏக்கத்தின் தாக்கம்

நட்பைப் பற்றிய
அவனது
கவிதை வரிகள்
உருக வைத்தன
நெகிழ விட்டன
சிலிர்க்க செய்தன

கலங்கிய கண்களுடன்
கவிஞனிடம் எப்படி
இப்படி எழுத முடிகிறது
என்று கேட்டதற்கு

அவன் சொன்னான்
எனக்கு நண்பர்கள்
இல்லை என்று.