பி.ஆர்.கிரிஜா/ஆடிப் பெருக்கு !

காவிரியில் நீர் கரை புரண்டு ஓடும் நாள் !
மனதில் மகிழ்ச்சி பொங்கும் நன்னாள் !
அனைவரும் கூடி
ஆடிப் பாடும் திருநாள் !
மேடு பள்ளம் கடந்து
புத்துணர்வோடு காவிரி கரை சேரும் நாள் !
இன்பம், துன்பம் வாழ்க்கையின் இரு பக்கம் என உணர்த்தும் நாள் !
காவிரிப் பெருக்கு
போல் இறை அருள்
கிட்டும் நாள் !
அன்பு, மனித நேயம் தழைத்தோங்கும் நாள் !
அனைத்து இல்லங்களில்
ஆனந்தம் நிலைக்கும் நாள் !
இனிய ஆடிப் பெருக்கு வாழ்த்துகள் !

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன