வாழையடி வாழை / அப்புசிவா

*

சைக்கிளை நிறுத்தினான்.
சுற்றுமுற்றும் பார்த்தான்.
யாருமே இல்லை.
அந்தக் குடிசையின் அருகே தள்ளிக்கொண்டிருந்த வாழைக்குலையை சத்தமின்றி வெட்டினான்.
கேரியரில் வைத்து வேகமாகக் கிளம்பினான்.
எப்படியும் இருநூறு பழம் தேறும் என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.
வீட்டை அடைந்து வாழைத்தாரை திண்ணையில் இறக்கிவைத்தான்.
உம்மென இருந்தாள் மனைவி.
“ஏண்டி… என்னா கவலையா இருக்க?”
“சந்தைக்குப் போனேன்”
“சரி?”
“பத்திரமாதான் போனேன்…”
“என்னான்னு சொல்லு சீக்கிரம் “
“பர்ஸூ காணா போச்சு… ஐநூறு ரூபா வச்சிருந்தேன்” என்று அழ ஆரம்பித்தாள் அவள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன