
இராமசாமியின் கொழந்த மனசு பதக் பதக்ன்னு அடிச்சிக்கிச்சி.
நாலு பேர் ஏதும் சொல்வாங்களோன்னு எப்போதும் பயம்.
சைக்கிள ஓட்ட முடியாம காலு நடுங்குச்சி.
யாருகிட்டையாச்சும் சொன்னா தன்னைக் கேலி செய்வாங்களோன்னு பயப்பட்டான்.
ஆனாலும் அவன் நினைக்கிறததான் செய்யணும்னு பொறப்பட்டான்.
அவனுக்கு ஊரு வச்ச பட்டப்பேரு கொழந்த.
கொழந்த மாதிரி தான் சிந்திப்பான்.
வானத்துல பறவைங்க எல்லாம் கூட்டம் கூட்டமாகப் பறந்து போனத பாத்தான்.
கவலைப்படாதே ஒன்னையும் ஒன்னோட அம்மாகிட்ட கொண்டு போய்ச் சேத்துடுறேன் கவலைப்படாதன்னுவாழைக்கொலகிட்ட பேசிக்கிட்டே போனான்.
