ஷைலஜா/ப்ரார்த்தனை

அந்த சிறுஊருக்குப் பெயரே பச்சை வயல்.அப்படியொரு பசுமை.
தபால் பட்டுவாடா முடித்து வீடுகிளம்பத்தயாரானான்போஸ்ட்மேன்வேலவன்.
அவனது சைக்கிள் காரியரில் ஒருநீண்டவாழைத்தாரை இலையில் சுற்றி வைத்தபாண்டியன் ‘தோட்டத்துல விளைஞ்சது கொண்டுபோ,” என்றார் உரிமையாக‌.
பாரமின்றிவண்டியை சாலையில்மிதித்துப்போக நினைத்த வேலவனுக்கு அவர்பேச்சைத்தட்டமுடியவில்லை‌.
ஏனென்றால் அவர் போஸ்ட்மாஸ்டர்.
வேண்டாவெறுப்பாய்சைக்கிள்பெடலைமிதித்தபடி பாதி வழி போகையில் வேலவனின்போன் அலறியது.
போனைக்காதில்வைத்தான்.
“என்னா ரஞ்சிதம்?”
“நமக்குப்பேரன்பொறந்துட்டான். பயந்தமாதிரி நம்ம மகளுக்கு ப்ரசவம் சிக்கல் இல்ல எல்லாம்நான்வேண்டிக்கிட்ட மலைக்கோட்டை தாயுமானசாமி அருள். உடனே ஒரு வாழைத்தார்
வாங்கிட்டுவாங்க.
ப்ரார்த்தனையை இன்னிக்கே நிறைவேத்திடலாம்.
சட்டென வாழைத்தார் அருகில் போய் அதை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தான் வேலவன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன