முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/கவலை நீக்கிய குலை

மனம் சோர்ந்து போய் விட்டாள் காயத்ரி. கணவன் அரவிந்தனுக்கு இருதார யோகமாம். அதிலும் ஒரு தாரம் இறந்து விடுவாளாம். தனக்கு முன் யாருடனாவது காதல் வந்து, கல்யாணம் ஆகி இருக்குமோ? கணவனை வேறு மாதிரிப் பார்க்க ஆரம்பித்தாள்.
இவர்களது வீட்டின் கீழ் போர்ஷனில் வாடகைக்குக் குடியிருக்கும் மாமி இவள் முகவாட்டத்திற்கான காரணத்தைக் கேட்க, இவளும் சொன்னாள்.
மாமி, ஒரு நல்ல நாளில் ஒரு குலை தள்ளிய வாழை மரத்திற்கு அரவிந்தன் கையால் தாலி கட்டி விட்டு, அதைக் கத்தியால் வெட்டச் சொன்னாள்.
அப்படியே குலை தள்ளிக் கிடக்கும் மீதி வாழைக்குலைகளையும் தோட்டக்கார முனியனை விட்டு வெட்டச் சொல்ல, அவன் அதைச் சைக்கிளில் எடுத்துச் சென்று, சந்தையில் விற்று வர, நிறையப் பணம் கிடைத்தது.
மனக்கிலேசத்தையும் நீக்கி, பணவரவுக்கும் வழி செய்த மாமிக்கு நன்றி சொன்னாள் காயத்ரி.
பெரியவர்களின் அருமையை உணர்ந்த அவள், முதியோர் இல்லத்தில் சேர்க்கப் பட்டிருந்த தனது மாமியாரை வீட்டுக்கு நிரந்தரமாக அழைத்து வர ஏற்பாடு செய்தாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன