முனைவர் என். பத்ரி/வாழவைக்கும் வாழைக்காய்

கோபாலு ஒரு விவசாயி. அவனுக்கு விவசாயம் தவிர வேறு தொழில் தெரியாது. நகரத்துக்கு வெளியே ஒரு கிராமத்தில் அவனுக்கு ஒரு ஏக்கர் நிலம் .அந்த நிலம் முழுவதும் வாழை மரங்கள் மட்டுமே. அவன் சில நாட்களில் கூலி வேலைக்கும் செல்வான். பெரும்பாலும் வாழைக்காய் விற்றுத்தான் அவனுடைய வாழ்க்கை சக்கரம் நகர்கிறது .சமீப கால புயல் ஒன்றில் அவருடைய எல்லா வாழை மரங்களும் கீழே விழுந்து விட்டன. ஒரே ஒரு வாழைமரம் மட்டும் விழாமல் இருந்தது .அதிலிருந்து வாழக்காயை விற்றுத் தான் தன்னுடைய மனைவிக்கும் ஒரே குழந்தைக்கும் அரிசி வாங்க வேண்டும். அதை விற்கத்தான் நகரத்திற்கு தன்னுடைய மிதிவண்டியில் இப்பொழுது செல்கிறான். நகரத்தில் நல்ல விலைக்கு இந்த வாழைக்காய் விற்று போகும். பஜ்ஜிக்கு இந்த வாழக்காய் மிகச்சுவையாக இருக்கும் என்பது மக்களின் பொதுவான எண்ணம். நம்பிக்கையோடு செல்கிறான் கோபாலு நகரத்தை நோக்கி. நம்புவோம் அவனுக்கு நல்ல விலை கிடைக்கும் அவனுடைய வாழைக்காய்க்கு என்று


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன