மரு.ச.கந்தசாமி/வாழை சீர்

கபாலியும் முத்துவும் சகோதரர்கள்.முத்து படித்து அரசு வேலையில் பக்கத்து ஊரில் வசிக்க ,கபாலி விவசாயம் செய்து வந்தான்.கபாலி “நானும் தம்பி மாதிரி படித்திருந்தால் இந்த விவசாயத்தை நம்பி நிலத்தில் காத்துக் கிடக்க வேண்டாம்” என‌ மனைவியிடம் புலம்பினான்.அவளோ” யார் யாருக்கு என்ன கிடைக்குமோ அது தான் கிடைக்கும்” என்றாள். முத்துவின் மகளுக்குக் கல்யாணம் இரண்டு வாரங்களுக்கு முன்பே வந்து “அண்ணே நீங்க ரெண்டு பேரும் முன்பே வந்து என் வீட்டு கல்யாணத்தை நடத்தி வைக்க வேண்டும்” என்று அழைத்துச் சென்றான். கபாலியோ மனைவியிடம் ” பொட்டு தங்கம் வாங்ககூட காசு இல்லையே” என யோசிக்க, தன் தோட்டத்து வாழை நினைவுக்கு வந்தது .உடனே விரைந்து சென்று “வாழைத்தாரை கல்யாண வீட்டு வாசலில் கட்டி என் தம்பி கல்யாணத்துக்கு அழகு பார்க்க வேண்டும் “என்று கூறி சைக்கிளில் கிளம்பினான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன