ஸ்ரீராம்/ஓவியம்

“டாடி.. மம்மி..” பெருங் கூச்சலுடன் ஸ்கூல் பஸ் நிற்பதற்கு முன்னாலேயே கீழே குதித்து, தடுமாறி, கையில் சுருட்டிய ஒரு பேப்பருடனும், பரிசு கோப்பையுடனும், முதுகில் மாட்டிய ஸ்கூல் பேக்குடனும் உள்ளே ஓடி வந்த ஏஞ்சலை, “பார்த்து.. பார்த்து… கீழே விழுந்திட போறே..” என்றபடி ஓடி வந்தவளை அப்படியே கையில் அணைத்து தூக்கிக் கொண்டான் ராபர்ட் .
“என்ன ஆச்சு? ஏன் இப்படி ஓடி வர்றே?” என்றபடி உள்ளிருந்து வந்தாள் ப்ரிஸ்ஸி.
“Below 15 years students க்கு நடந்த பெயிண்டிங் காம்பெட்டிஷன்ல எனக்கு ஃபர்ஸ்ட் பிரைஸ் ன்னு சொன்னேனே… இந்தப் படத்துக்குத் தான்.” என்று சுருட்டிய பேப்பரை நீட்டினாள் ஏஞ்சல்.
போட்டி நடந்த நாளிலிருந்து அவள் என்ன ஓவியம் வரைந்தாள் என்பதை எவ்வளவு கேட்டும் அப்பா அம்மாவிடம் சொல்லவில்லை. சின்ன வயதிலேயே மிக அற்புதமாக வரையும் திறன் அமைய பெற்றிருந்தாள் ஏஞ்சல்.
படத்தை வாங்கி பிரித்துப் பார்த்த ராபர்ட். நெகிழ்ந்து போனான். இப்போது நல்ல நிலையில் இருந்தாலும், தன்னுடைய ஆரம்ப நாட்களைக் கதை கதையாக மகளுக்குச் சொல்லி இருந்தான் அதைத்தான் அற்புதமான வண்ணங்களுடன் ஓவியமாகத் தீட்டி இருந்தாள் ஏஞ்சல்.
அருகில் வந்து படத்தைப் பார்த்த பிரிஸ்ஸியும் மனம் கனிந்து ராபர்ட் கையில் இருந்த ஏஞ்சலை ராபர்ட்டோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

One Comment on “ஸ்ரீராம்/ஓவியம்”

Comments are closed.