எம். எல்.பிரபா/”தங்கையின் வாழை”

ராதாவுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகிறது. அவள் தினமும் இரவில் அண்ணன் ரகுவிடம் போனில் பேசிவிட்டு தான் தூங்குவாள். போன் அடித்துக் கொண்டே இருந்தது. ரகு ஓடி வந்து போனை எடுத்து ஹலோ, எப்படிம்மா இருக்க? என்றான் .நான் நல்லா இருக்கேன் அண்ணா. உன்ன தான் பாக்கணும் போல இருக்கு .ஒரு எட்டு வந்துட்டு போயேன் என்றாள். சரி ‘நாளைக்கு கண்டிப்பா வரேன்மா’ என்றான் ரகு. ராதாவுக்கு அம்மா, அப்பா எல்லாமே ரகு தான். இவனுக்கும் ராதா மேல் அதிக பாசம் .ராதாவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. கையில் இருந்த காசெல்லாம் செலவழிஞ்சு போச்சு. இன்னும் நாலு நாள் கழிச்சுதான் சம்பளமும் கிடைக்கும். கல்யாணம் முடிஞ்சு இப்பதான் முதல் முறையா ராதாவை பார்க்கப் போகிறேன். ஏதாவது வாங்கிட்டு போகணுமே என்ன செய்வது? என்று குழம்பியபடி நடந்து கொண்டிருந்தான். சட்டென்று அவனது பார்வை ஜன்னல் பக்கம் சென்றது. வாழை குலை தள்ளித் தொங்கியது. அது ராதா வைத்த வாழைக்கன்னு தான் இப்பொழுது பெருசாகி குலை தள்ளி இருக்குது. அதைப் பார்த்தவுடன் நிம்மதி பெருமூச்சு விட்டுத் தூங்கினான். விடியற்காலையில் எழுந்து வாழைக்குலையை வெட்டிச் சைக்கிள் பின்னாடி வைத்துக் கொண்டு தங்கையைப் பார்க்கப் புறப்பட்டான் ரகு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன