
இடது கையில் எலும்பு முறிவு மற்றும் பின் மண்டையில் ரத்தக்கசிவு என்று ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடந்தாள் மாயா.
பள்ளியிலிருந்து வரும்பொழுது ஒரு சைக்கிள் காரன் வந்து மாயா மேல் மோதிவிட்டு, வண்டியை நிறுத்தாமல் சென்று விட்டான்.
அடிபட்ட மாயாவை பக்கத்து வீட்டு வசந்த் உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, போலீசிலும் புகார் அளித்து விட்டான்.
போலீஸ் வந்து விசாரித்தபொழுது மாயாவால் ஒரு சைக்கிள் காரன் தன்னை இடித்து விட்டான் என்று சொல்ல முடிந்தது
அந்தத் தெருவில் நிறைய சைக்கிள்கள் செல்வதால்,
போலீஸ்காரர்கள் சிசி டிவியில் பார்த்தபொழுதும், அவர்களால் விபத்து ஏற்படுத்திய சைக்கிள்காரனை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதே நேரம், ஆஸ்பத்திரியில் ஜானகி தூங்கிக் கொண்டிருக்க அவள் மொபைலை எடுத்து மாயா பார்த்துக்கொண்டிருந்தாள்
அவள் பார்த்தது மேலே உள்ள’ சைக்கிளில் வாழைக்குலை எடுத்துச் செல்லும் வாலிபன் ‘ படம்.
உடனே ஜானகியை எழுப்பி, “அம்மா! அம்மா! அந்த அங்கிள் சைக்கிளிலும் இது மாதிரி இருந்தது என்று கூறினாள்.
உடனே போலீஸ் வாழைக்குலை ஏற்றிச் சென்ற மணிகண்டனை கைது செய்து, மாயாவிற்கு நஷ்ட ஈடும் கிடைக்க செய்தது.
ஒரு படத்தால் கதை மட்டுமல்ல, அநீதிக்கு ஒரு தீர்வும் கிடைத்தது பார்த்தீர்களா?
