எஸ் . எல். நாணு/பலி


ஊருக்கு வெளியே இருந்த காட்டு பங்களாவில் நரபலிக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு மாரியின் வருகைக்காகக் காத்திருந்தான் தேவன்.
பங்களாவின் கூடத்துக்கு நடுவில் பெரிய ஹோம குண்டம். அதில் விடாமல் தணல் தகித்துக் கொண்டிருந்தது.
பக்கத்தில் குங்குமம் சந்தனம் பூசிய பெரிய பைரவ கத்தி.
மாரி வந்துவிட்டால் யாகத்தின் கடைசிக் கட்டமான நரபலி முடிவடைந்து தேவனுக்கு உலகளாவிய சக்தி வந்து விடும். அதன் பிறகு அவன் உலகத்தையே ஆளலாம் என்று நம்பினான்.
அந்த இருட்டில் மாரி சைக்கிளை வேகமாக மிதித்தான்.
சைக்கிள் கேரியரில் பெரிய வாழைக்குலை.
அதனுள்ளே முந்தய இரவு எசக்கியப்பன் மகள் ராக்காயிக்குப் பிறந்த ஆண் சிசு.
இந்தச் சிசுவின் வருகைக்காகத்தான் தேவன் காத்திருந்தான்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்தச் சிசு அவனால் பைரவ கத்திக்குப் பலியாகப் போகிறது.
பங்களாவின் கதவு தட்டப்பட்டது.
வாழைக்குலையைத் தூக்க முடியாமல் நின்றிருந்தவனை அரை இருட்டில் பார்த்த தேவன்
“வந்துட்டியா மாரி? சிசுவை சீக்கிரம் தா.. ராக்சஷ ஹோரை முடியறதுகுள்ள பலி கொடுத்துரலாம்”
தேவன் கையை நீட்ட வாழைக்குலையைக் கீழே போட்டுத் துப்பாக்கியை நீட்டினார் இன்ஸ்பெக்டர் அருண்ராஜ்.
பதுங்கியிருந்த நான்கு கான்ஸ்டபிள்கள் வெளிப்பட்டுத் தேவனைப் பிடித்துக் கொண்டார்கள்.
தேவன் அதிர்ச்சியோடு இன்ஸ்பெக்டருக்குப் பின்னால் நின்றிருந்த மாரியைப் பார்த்தான்.
அவன் கண்களில் நீர்.
(138 words)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன