
பச்சை பசேல் என்ற வயல் சூழ்ந்த கிராமம் சித்திரப்பட்டி. கந்தசாமிக்கு அவனுடைய ஊர்மேல் அப்படியொரு காதல். தினமும் சைக்கிளில் சென்று தன் வேலைகளை முடிப்பான். அப்பா குமாரசாமி விவசாயம் பார்த்தாலும் கூடவே சில தொழில்களும் செய்து வந்தார். நல்ல உழைப்பாளி. விவசாயத்தில் முதுகலை பட்டதாரியான அவர் தன் மகனையும் அதே படிப்பு படிக்க வைத்தார். கந்தசாமிக்கு இயற்கையிலேயே விவசாயத்தில் ஆர்வம் இருந்ததால் நன்கு படித்து அப்பாவோடு சேர்ந்து எல்லா வேலைகளையும் செய்து வந்தான்.
அந்த ஊரிலேயே விவசாயத்தில் புரட்சி செய்த ஒரே குடும்பம் குமாரசாமியுடையது.
ஒரு நாள் பக்கத்தில் உள்ள நகரத்தில் பொருட்காட்சி என்ற விளம்பரத்தைப் பார்த்தான் கந்தசாமி. அப்பாவும் மகனும் அதில் ஸ்டால் போட முடிவு செய்து அதற்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்தனர். புது உத்தியைப் பயன்படுத்தி நல்ல விளைச்சல் கண்ட தங்கள் பயிர்களைப் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை தயாரித்து தன்னுடைய கணினியில் ஸ்டோர் பண்ணினான்.
தன்னுடைய ஸ்டாலை புதுமையான முறையில் தயார் செய்து எல்லோர் கவனத்தையும் ஈர்க்க முடிவு செய்தான். மற்ற விவசாயிகளைக் காட்டிலும் அருமையாக, வித்தியாசமாகத் தங்களுடைய விளைச்சல் அதிகமானதற்கான உத்திகளை ஏ ஐ தொழில் நுட்பத்துடன் அழகாக , தெளிவாக விளக்கினர்.
கண்காட்சியில் இருவரும் சிறந்த விவசாயிகள் என்ற பரிசும், சான்றிதழும் பெற்றனர்.
உழைப்பையும், திறமையும் மூலதனமாக வைத்தால் சாதனை புரியலாமென மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகக் குமாரசாமியும், கந்தசாமியும் காண்பித்தனர்.
எப்போதும் மன நிறைவுடன் மகிழ்ச்சியாக வாழும் இவர்களை ஊரே கூடி கொண்டாடி மகிழ்ந்ததில்
வியப்பென்ன !!
(164 words)
