
ஆறுமுகம், முதலாளி பரமேஸ்வரன் கொடுத்தனுப்பிய வாழைத்தாரை சைக்கிளில் சணல் கயிறு வைத்து இறுக்கிக் கட்டிவிட்டு திருவள்ளூரைச் சேர்ந்த மீஞ்சூரிலிருந்து பூங்குளம் நோக்கிச் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான்.
பூங்குளத்தில் பண்ணையார் வீரபாண்டியன் வீட்டில் கொண்டு சேர்க்க வேண்டும்.
பரம எம்ஜிஆர் ரசிகன் ஆறுமுகம்.
“கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்”, சுற்றியிருந்த பசுமையையும், இயற்கையையும் ரசித்தபடி பாடிக்கொண்டே புல்லட் ஓட்டும் தோரணையோடு பெடலை மிதித்தவண்ணம் சென்றான்.
திடீரெனப் பிரேக் போட்டபடி சைக்கிள் நின்றுவிட, ‘கெளம்பறச்ச கூடப் பார்த்தேனே, டயர் காத்தெல்லாம் சரியாத்தானே இருந்துச்சு.
ஐயா, பசிக்குது, சாப்பிட்டு நாலு நாளாச்சு. சைக்கிளைப் பிடித்து நிறுத்திய சிறுவர்களைப் பார்த்தால் பாவமாயிருந்து அவனுக்கு.
தான் சாப்பிட வைத்திருந்த பணத்தில் அருகிலிருந்த மெஸ்ஸில் உணவு வாங்கிக் கொடுத்துப் பசியாற்றினான்.
இந்தாங்க பழுத்ததும் பங்கிட்டுச் சாப்பிடுங்க.தாரிலிருந்து கிட்டத்தட்ட ரெண்டு சீப் பழம் அறுத்துக் கொடுத்துவிட்டு தன் போக்கில் பாடிக்கொண்டே பயணித்தான் ஆறுமுகம்.
