நாபா.மீரா/நறுமுகையே!

அப்பா ..அப்பா, சத்தமாக அழைத்தவாறே உள்ளே நுழைந்தாள் அஞ்சலி.
ஏம்மா, இவ்வளவு பதட்டமா வர்றே கேட்டபடியே அவளை அமரவைத்து குடிக்க சில்லென்று மண்பானை நீர் கொடுத்தாள் அம்மா.
வெட்டிவேர் சுவையுடன் குளிர்ந்த நீர் தொண்டையில் இறங்கியதில் அவள் படபடப்பு சற்றே தணிந்தது.
அறையிலிருந்து வெளியே வந்தவரிடம், “என்னப்பா இதெல்லாம்,” என்று அந்த மஞ்சள் பையை அவரிடம் கொடுத்தாள்.
பையில் கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் ரூபாய்.
“போராட்டம் காரணமா தற்காலிக சம்பள நிறுத்தம் மட்டுந்தான், வேலையே போயிடலை.
நீயும், குழந்தைகளும் கஷ்டப்படக் கூடாதுன்னுதான்,” என்று இழுத்தவரிடம், அதை,”வெட்டியா தலைவர் அந்தஸ்துல தொழிலாளிகளத் தூண்டிவிடுற எம்புருஷன் சிந்திக்கணும்.”
“இந்த மாதிரி ஆதரிக்கிற பெற்றோர் வீடுகள் இல்லாதவங்க என்ன செய்வாங்க பாவம்.”
“உங்க அன்பை அவமதிக்கிறேன்னு நினைக்காதீங்க.என்னைப் பொறுத்தவரை இது மொத்தத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கான அறப்போராட்டம்.
அது மட்டுமில்லை, இன்னைக்கு வளர்ற குழந்தைகளுக்கும் போராட்டங்களுக்கான நியாய அநியாயங்கள் தெரியணும்.
பணத்தை பத்திரமா பீரோவில் வைத்துப் பூட்டுங்க.”
“நாக்கிளம்பறேன், ” விடைபெற்ற மருமகளைப் பெருமையுடன் வழியனுப்பி வைத்தனர் அந்தப் பெற்றோர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன