வி.பிரபாவதி/நம்பிக்கை

பொழுது விடிந்ததுமே வாழைத்தாரை வெட்டிப் பத்திரமாகச் சைக்கிளில் கட்டிக் கொண்டு சைக்கிளை வேகமாக மிதித்தான் மாறன்.
பெரிய வீட்டம்மா போன வாரமே சொல்லியிருந்தாங்க. ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்குக் கூழ் ஊத்தும்போது அந்த ரஸ்தாளி மரத்தின் முதல் தாரை அம்மன் பாதத்தில் வைத்து எல்லோருக்கும் பிரசாதமாகத் தரணும்னு சொன்னாங்க.
நேத்து சாயந்தரமே கொடுத்துரலாம் என்று நினைத்திருந்தான். அடர்ந்த மழையின் காரணமாக முடியவில்லை. இதோ எதிர் வெயிலையும் பார்க்காமல் கிளம்பிவிட்டான்.
“பூசாரி ஐயா, நம்ப வாழை மரத்தோட முதல் தாரைக் கொண்டு வரச் சொல்லியிருக்கேன் மாறனிடம். கொஞ்சம் பொறுத்துக் கூழ் ஊற்றலாம்” என்றாள். மாறன் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தாள்.
வழியில் சைக்கிள் பஞ்ச்சர் ஆகிவிட்டது. சற்றும் யோசிக்காமல் சைக்கிளை ஒரு மரத்தடியில் போட்டுவிட்டு வாழைத் தாரை முதுகில் சுமந்தவாறு நடந்து ஓடி, சரியான நேரத்துக்குக் கொண்டு சேர்த்து விட்டான்.
எல்லோர் முகத்திலும் பிரகாசமான மகிழ்ச்சி. பெரிய வீட்டம்மாவின் நம்பிக்கை வீண் போகவில்லை.
வந்த வேகத்தில் திரும்பினான். சைக்கிள் சமர்த்தாகக் காத்திருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன