
ராக்காயி வாழைத்தாரைக் கட்டி எடுத்து வந்து சைக்கிளில் கட்டி வைத்தாள். .”எடுத்துட்டு போய் வெரசா வந்துடு. நம் வூட்டிலும் இன்னிக்கு ஆடி வெள்ளி கும்பிடணும். இதிலிருந்து ரெண்டு வெட்டிக் கொடேன். நம்ம உழைப்பினால் தானே முதல் குலை வாத்தியார் வீட்டுக்குப் போவுது. நானும்தான் வேண்டியிருக்கேன். பிள்ளை பிறக்கவும், செல்லியம்மனுக்குப் படைக்கிற பொங்கலுக்கு முதல் தாரிலிருந்து பழம் வைக்கிறேன்; என்று. ‘ அதெப்படி, ? என்னைக் கேக்காம, இப்படி கண்டபடி வேண்டலாம்? நாம் கொல்லையை காபந்து செய்யத்தான் இருக்கோம். கபளிகரம் செய்யறத்துக்கல்ல; ‘ என்றபடி சைக்கிளை மிதித்தான்; அழகன். ராக்காயி ஏமாற்றத்துடன், அவன் போவதை பார்த்துக்கொண்டிருந்தாள்.
சிறிது தூரம்தான் போயிருப்பான், வாத்தியாரிடமிருந்து ஃபோன். “குலை வெட்டிட்டயா? இன்னிக்கு வீட்டம்மா சுரத்தில் படுத்திட்டா.நீயே செல்லியம்மனனுக்கு கற்பூரம் காட்டி கும்பிட்டு; எல்லாருக்குமா பகிர்ந்திடு” என்றதும் அழகன்” சாமி ! எங்க வீட்டு பொங்கலில் வைச்சு படைச்சுடவா” என்றதும்” இதென்னடா, கேள்வி! தாராளமாக!” என்றார்.
“ராக்காயிக்கு செல்லியம்மன் அருள் இருக்கு.” என்று, உற்சாகத்துடன் திரும்பலானான்.
111 words

அருமையான கதை