
தலையை நன்கு ஷாம்பூ போட்டுக் குளித்துப் பறக்கவிட்டபடி அறையை விட்டு வெளியே வந்தாள் அனிதா.
இது என்ன தலைவிரிக் கோலமோ? நல்லாவா இருக்கு? ஒரு ரப்பர் பேண்டால் கொண்டை போட்டுக்கொள்ளக் கூடாதா என்று நினைத்தார் மாமியார் வசந்தா. கேட்பது பையனுக்கே பிடிக்காது.
அனிதாவிற்கு அழகாய்த்தான் இருந்தது. கணவனுடன் வண்டியில் பயணம் செய்தபோது எதிரே வந்த டேங்கர் லாரி உரசியதில் அனிதா சற்றுத் தள்ளிக் கீழே விழுந்தாள். அவள் கணவன் பிரேக் பிடித்ததில் காயங்களின்றி தப்பித்தான். அனிதாவின் காற்றில் பறந்த முடி சேற்று மண்ணில் புதைந்து முகம் வானத்தைப் பார்த்தவாறு கிடந்தாள்.
மிகவும் கஷ்டப்பட்டு முடியைப் பிடுங்கி, கொஞ்சம் கத்தரித்துத் தூக்கி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
“காலம்பறயே சொல்லலாம்னு நெனச்சேன். நீ கேப்பியோ மாட்டியோன்னு விட்டுட்டேன். என் கண்ணே பட்டுடுச்சு. அழகான முடி இப்படி ஆயிடுச்சு. இனிமே தலைய அழகா போனிடெயில் போட்டுக் கிட்டுப் போமா. ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றாள் வசந்தா. “சரிங்க அத்தை” என்றாள் அனிதா கண்ணீருடன்.

ஆஹா நல்ல வேளை பெரிய விபத்தில் இருந்து தப்பியாச்சு