அழகியசிங்கர்/வாழைப்பழம்

மயிலாடுதுறையிலிருந்து 3 கிலோமீட்டர் தூரம்தான் அசிக்காடு கிராமம்.
என் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி கூப்பிட்டார்
வயலில் விளைகின்ற பொருள்களைக் கொடுப்பதற்குத்தான் கூப்பிடுகிறார். இந்த முறை என்ன கொடுக்கப் போகிறார். ஆவலாக இருந்தேன். சைக்கிளை ஓட்டிக்கொண்டு போனேன்.
அண்ணன் என் சைக்கிள் பின்னால் கட்டிக் கொடுத்தது வாழைத்தாரு.
வீடு வந்து சேர்ந்தவுடன், ‘இதற்குத்தான் கூப்பிட்டாரா?’ என்றாள் சாந்தி.
‘வறுவல் பண்ணலாமென்று’ நான் சொன்னேன்.
‘நறுக்குவதற்குள் உயிர் போயிடும்,’ என்றாள் சாந்தி.
‘நான் நறுக்கித் தருகிறேன்,’ என்றேன்.
அரிசி டின்னில் வாழைத்தாரை வைத்தோம். மறந்தும் விட்டோம்.
ஒரு வாரம் கழித்து ஞாபகம் வந்து அரிசி டின்னைத் திறந்து பார்த்தோம்.
எல்லாம் பழமாக மாறி எங்களைப் பார்த்துச் சிரித்தன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன