
“இந்த ஆம்பளைகள் நினைத்தால் சைக்கிளில் குடத்தை கட்டிக்கொண்டு போய்ச் சட்டுனு தண்ணி எடுத்துட்டு வந்துடலாம். ஒரு தடவைக்கு ரெண்டு மூணு குடங்கள் கூடக் கொண்டு வரலாம். நம்மையே அலைய வைக்குறாங்களே.”
“சில ஆம்பளைங்க எடுத்துட்டு வர்றாங்க தான் பொம்மி… ஆனா பாரு். அவங்க வீட்டு பொம்பளைங்க வீட்டுக்குள்ளேய இருக்காங்க. நமக்கோ சுமை தூக்கறது பெரிய விஷயம் இல்லை. நாள் முழுக்க வேலை செய்யற நமக்கு வெளியில வந்து உன் வீட்டு நிலைமை, என் வீட்டு நிலைமை, ஊர் நிலைமை பேசிச் சிரிச்சு சந்தோஷமா கொஞ்ச நேரம் போக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. நாமளும் வயசாகியும் உடல் நலத்தோடு இருக்கலாம்” என்றபடி நடக்கும் பெண்களைக் கவனித்து சிரித்துக் கொண்டாள் சிறுமி.
