
வள்ளி,“ஏண்டி ராக்கு தெரியுமா விஷயம் நம்மூரு குளத்துக்கு விடிவு காலம் வரப் போவுதாமில்ல?”
“என்னத்தை போ ஒவ்வொரு தேர்தல் வரப்பவும் இதுதான் பேச்சு, ஆனா நாமளும் இருவது வருஷமா இந்தக் குடத்தை தூக்கிட்டுதான் திரியுதோம்.”
எச்சுமி,”இந்தத் தடவை ஏமாத்த முடியாது, இந்தப் பசு மாடுகளைப் பாரு நம்ம கூட நம்பிக்கையோடு வருது ஊத்துலயாவது தண்ணி வரும் உண்டு.கோவில் தர்ம கர்த்தா எல்லாரண்டையும் கட்டுக்கோப்பா இருக்க சொல்லி இருக்காரு.”
“அரசியல்காரவுக நம்மளை விடக் கெட்டி, ஒவ்வொரு தடவையும் ஏதாவது சொல்லிக் கெலிச்சு வருவாக, நம்ம ஊர் குளம் என்னவோ அப்படியேதான்.”
“இல்லை குளத்தைத் தூர் வாரி, தண்ணிவரா மாதிரி யாரு செய்றாகளோ அவங்களதான் கெலிக்க வைக்கப் போறோம், இது சத்தியம்”
“யேய் மாரி இதோ பாருடி நிசமாவே குளத்தைத் தோண்டி சீர் பண்ண மெஷினுங்க வந்துடுச்சு சந்தோஷமாய் கத்தினாள் ராக்கு”
குஞ்சனூர் குளம் சீக்கிரம் நிரம்பிடும் நல்ல காலம் வருது.
