சாந்தி சந்திரசேகரன்/இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்!

நீர் சொட்டு சொட்டாக ஊறியது.
காத்திருந்த பெண்கள் நொந்து போய்ப் புலம்பத் துவங்கினர்.
“இந்தத் தண்ணிக்காக நாலு கிலோமீட்டர் நடந்து வரதுக்குள்ள
குறுக்கு வலியும் கால் வலியும் உசுரு போகுத்துக்கா.”
“ம்க்கும்.. இதுல இந்த வெயிலு வேற. வீடு சேர்றதுக்குள்ள தல வலி வந்திடுது”
“நேத்து சுந்தரி மயங்கியே விழுந்துட்டா தெரியுமா.?”
“வீட்டுல போய் உல வைக்கணும். அவரும் புள்ளைங்களும் வாறதுக்குள்ள.
வீட்டு வேலை எல்லாம் முடிச்சி வைக்கணும்”
தூரத்தில் வேலை முடிந்து வண்டியில் வீடு திரும்பும் சுந்தரம் இதைப் பார்க்க
“எங்க போனாலும் கூடி நின்னு ஊர் வம்பு பேசலைன்னா
இந்தப் பொம்பளைங்களுக்குப் பொழுது போகாது போலயே.!” என்க,
கூட வந்தவனும் கூடிச் சிரித்தவாறு வீடு நோக்கிச் சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன