
“அடியே செண்பகம் விசயம் தெரியுமா?”
என்று ஆரம்பித்தாள்நீலாவதி.
” அந்த மேனாமினுக்கி முத்துலட்சுமி கசாப்புக்கடை கதிரூகூட ஓடிப்போயிட்டாளாம்.”
நர்மதா வேகமாக “அதைவிட பெரியவிசயம்கேளு.
வடக்கு தெரு வடிவு அவ மாமியார்தலைல கோபத்துலகல்லை வீசினாளாமே?”என்றாள்.
பங்கஜம் சிரித்தபடி”ஆனா கல்லுதான் ரெண்டா உடைஞ்சிதாம்.வடிவு கொடுத்து வச்சது அவ்ளோதான் போ..”எனப் பெரிதாகசிரித்தாள்.
“ஆனாலும் செங்கமலத்துக்கு வாய்க்கொழுப்பு. இந்த மஞ்சசேலைய வாயிலான்னுககேட்டுப்புட்டாடி!”..நீலாவதி
“அப்டியா அவ நல்லாஇருப்பாளா?”.…பங்கஜம்.
“மேலத்தெரு ராங்கிக்காரி ரஞ்சிதம் நம்மகூட கிணத்தடிக்கு தண்ணி எடுக்க மகளை அனுப்பியிருக்கா ஏன் தெரியிதா..?”
“வரவர அவ காது செவிடாகிடிச்சி..நாமபேசறதைஒட்டுக் கேட்டு வர இவளை அனுப்பிட்டா.
பாரு..ஓசைப்படாம பூனையாட்டம் கூடவருது ..!”.நர்மதா கிசுகிசுத்தாள்.
மூவரும்,”நாமஎன்ன ஊர்வம்பாபேசறோம்? தண்ணி எடுத்திட்டுப்போனோமா வீட்ல உலை வைப்போமான்னு அப்பாவி
பொம்பளைகளா அல்லாடறோம்..
“க்கும்..” என்றபோதுஅவர்கள்கையிலிருந்த பானைகள் சிரிக்கத்தொடங்கின.
