
டேய் கமலேஷ் என்னை விட்டு ஏண்டா போனே, ஷைலஜா கொஞ்சம் கோவம் கலந்த கொஞ்சலோடு கேட்டாள். இந்த மாலை நேரங்களை நாம சேந்து எவ்வளவு ரசிச்சிருக்கோம்.
”தென்றல் காற்றுன்னா இதுதான் பாரு உன் முகத்தைத் தொட்டு விளையாடிக் கன்னத்தை ஆசையா வருடிவிட்டு அப்பறம் என் கிட்ட வருது” கமலேஷ் காதோட சொன்ன வார்த்தைகள்
விமானப் படையில் தேர்வாயிடுச்சுடி செல்லம், ஜம்முல போஸ்டிங். சீக்கிரம் வந்து கூட்டிட்டு போறேண்டானு பறந்துட்டான் அந்த அத்தை மகன் அழகு ரத்தினம் கமலேஷ் எனும் என் மனம் கவர்ந்த பாவி.
மூணு மாசம் ஆச்சு ஒரு தகவலும் இல்லை நான் மட்டுமா எல்லாரும் காத்திருக்கோம், அவனுக்குப் புரியலையா.
என் தவிப்பு புரியாமல் இந்தத் தென்றல் என் முகத்தை வருடி விட்டுத் தலை முடியைக் கலைத்து விட்டு மிதந்து போகுதே ஜம்மு வரை போகுமோ என் தவிப்பை கூறுமோ.முடியாதெனில் தென்றலே இனி என்னைத் தீண்டாதே.
