கௌரி சங்கர்/முத்துவேல் பங்களா

சுமார் எழுபது வருடங்களுக்கு முன்பு கன்னிகாபுரம் கிராமத்தின்  ஒரே பண்ணையார் கட்டிய வீடு தான் முத்துவேல் பங்களா. கிராமத்தில் அப்போது மொத்தமே எட்டு தெருக்கள் தான். பள்ளிக்கூடம் இன்னும் வரவில்லை. நஞ்சைக்காடுகளுக்கும், பூஞ்சைக்காடுகளுக்கும் சென்று வந்தனர் பெருசுகள். சில சிறியவர்கள் இரண்டு கிலோமிட்டர் தூரம் நடந்து அடுத்த கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்தனர்.

முத்துவேல் பங்களா முன்பு வருபவர்கள் மூக்கின் மீது விரல் வைத்து மூன்று நிமிடங்கள் நின்று பார்த்து விட்டுச் செல்வார்கள். குடிசைகளில் மற்றும் ஓட்டு வீடுகளில் வாழ்பவர்களுக்கு இது ஒரு சொர்க்கம்.

பண்ணையார் மாலை ஐந்து மணிக்கு முதல் மாடி பால்கனியில் நாற்காலியில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார். அவருக்கு ஒத்து ஓதுவதற்கு கந்தசாமியும், முருகேசனும் வந்து அருகில் நின்று கொள்ளுவார்கள். ஊர் நிலவரங்கள் அலசப்படும்.

ஒரு நாள் – பண்ணையார் உள்ளறையில் இறந்து கிடந்தார். இதயம் வெடித்து விட்டது என்றார்கள். மருந்து வைத்துக் கொலை செய்யப்பட்டார் என்றார்கள்.

விஷயம் அப்படியே மறந்தும் போனது. குடும்பத்தில் உள்ள அவருடைய மகன் வடமாநிலம் சென்று தங்கி விட்டான். மனைவி இறந்து விட்டாள்.

பங்களா நாற்பது வருங்களாகப் பூட்டியே கிடக்கிறது. உள்ளே செல்ல எவருக்கும் தைரியம் இல்லை. மூன்று நிமிடங்கள் பங்களா முன்பு நின்று பார்த்த காலம் மறைந்து மூச்சைப்பிடித்துக்கொண்டு ஓடும் காலம் வந்து விட்டது.

பங்களாவில் பேய் இருக்கிறது என்கிறார்கள்; பிசாசு வந்து போகிறது என்கிறார்கள்.

ஊர் தலையாரியிடம் கேட்கப்போகிறேன். கேட்டுவிட்டு சொல்லுகிறேன்.

153 words

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன