எஸ்.எல். நாணு/கைபொம்மை

“செல்வி. காலி குடத்தை எடுத்துகினு நம்மள எதுக்கு இங்க வரச்சொன்னாங்க?

நாம ரொம்ப காலமா கேட்டுக்கிட்டே இருக்கற தண்ணி லாரி வரப்போகுதா?”

முனியம்மா கேட்டவுடன் செல்வி கிண்டலாகப் பார்த்து

“வந்துட கிந்துடப் போவுது. எதிர்கட்சிக்காரங்க தண்ணிக்காகப் போராட்டம் நடத்தறாங்களாம்.

கூட்டம் சேரணும்ல.

அதான் நம்மள காலி குடத்தோட கண்டிப்பா வரச் சொல்லிட்டாங்க.”

”ஏன் செல்வி. போராட்டம் நடத்தினா என்னாகும்?”

பார்வதி கேட்டாள்.

“நாளைக்கு பேப்பர்ல அவங்க போட்டோ போட்டுச் செய்தி வரும்”

“அதனால?”

”போராட்டம் பண்ணின கட்சி ஆளுங்களுக்கு மேலிடத்துல அங்கீகாரம் கிடைக்கலாம்”

“அதனால?”

“அவங்க பதவி கிடைச்சு நிறைய காசு சம்பாதிச்சு உசந்த நிலைக்குப் போயிரலாம்”

“அப்பப் போராட்டத்துல கலந்துக்கிட்ட நாம?”

“வழக்கம்போலக் காலி குடத்தோட மூணு கிலோமீட்டர் நடந்து போய்த் தண்ணிய சுமந்துகிட்டு வருவோம்.

நாம கைபொம்மைங்க.

நம்மள வெச்சு அவங்க அரசியல் விளையாட்டு விளையாடுவாங்க. அவ்வளவுதான்”

94 words

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன