
“ஏன்டி கோமளா? எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. நீ எங்கே போனாலும் எதுக்கு இந்தக் குட்டிப் பிள்ளையை அதான் உன் தங்கை குமுதாவைக் கையில் பிடிச்சுக்கிட்டே போறே? ” என்று கேட்டது அவளின் தோழி கங்கா.
தோழி சாந்தாவும் “ஆமாம் கோமளா, எனக்கும் தான் இந்தக் கேள்வி மனதில் வந்தது.”
மூவரும் கையில் குடத்தைச் சுமந்தபடி குடிக்கும் தண்ணீர் கிடைக்கும் பாலாற்றின் நீர் வரும் அடிபம்பை நோக்கி நடந்தபோது தான் இந்தப் பேச்சு வந்தது.
“உங்களுக்கே தெரியும் எனக்கும், குமுதாவுக்கும் பத்து வயசு வித்தியாசம் என்பது. இவள் பிறந்ததிலிருந்து அம்மாவின் உடல்நலம் சரி இல்லாமல் போக, அப்பாவும் வெளியூரில் வேலை பார்க்க, நான் தான் முழுவதும் இவளைப் பார்த்துக் கொண்டேன்”.
” ஆனால் இப்போ இவள் தான் எனக்குப் பாதுகாவல். என்னிடம் வலியப் பேசி அசடு வழிய, அத்துமீற விரும்பும் எந்த ஆண்களும் இவளால் என்னிடம் நெருங்குவதில்லை. இப்போ புரியுதா?” என்றாள் சிரித்தபடி கோமளா.
(109 words)
