சுசி கிருஷ்ணமூர்த்தி/கடவுள் விளையாட்டு

 *பிள்ளையார் வாயிலிருந்து பால் வழிவது பற்றிதான்  இடது மூக்கில் மூக்குத்தி அணிந்த மகாராஷ்டிரா  பெண்கள் கையில் குடத்துடன் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

அந்தக் கிராமத்து  பிள்ளையார் தலையில்  ஒரு ஓட்டை உண்டு. அதில்  குடம் குடமாய் நீர் கொட்டி, வாயிலிருந்து வழியும் நீரை பக்தர்கள் பிரசாதமாக எடுத்துக் கொள்வார்கள்.

இப்பொழுது பால் வருவதை ஏதோ தெய்வச் செயல் என்று  எல்லோரும் நினைத்து, கோவிலில் கூட்டம் அதிகமாகி  வாசலில் ஒரு உண்டியல் வைத்து நல்ல கலெக்ஷணும் ஆகிக்கொண்டிருந்தது.

கோவில் பூசாரியும் அவர் மனைவியும் கூட அவ்வப்போது குடத்தில் நீர் கொண்டு வந்து ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் நீர் ஊற்றுவதை பார்த்துக் கொண்டிருந்த வாய் பேச முடியாத அவர்கள் மகள், திடுமென்று எழுந்து கோவிலின் பின்னால் இருந்த தங்கள் வீட்டிற்கு ஓடினாள். . 

கையில் ஒரு பவுடர்  பால் பாக்கெட்டுடன்  ஓடி வந்து, பூசாரியைப் பார்த்து ‘அப்பா ! பால்  பவுடர் கலக்க மறந்துட்டீங்களே” என்று கத்த, வாய் பேச முடியாமல் இருந்த மகள் பேசுவதை பார்த்துப் பூசாரியும் மனைவியும் அழுதுகொண்டே மகளைக் கட்டிக் கொண்டார்கள்.

அப்பொழுதுதான் பக்தர்களுக்குத் தெரிந்தது, பூசாரி தான் கொட்டும் குடத்து நீரில் பால் பவுடர் கலந்து, பிள்ளையார் வாயிலிருந்து பால் வருவதாகத் தங்களை ஏமாற்றியது. 

தன்னை அடிக்க வந்த பக்தர்கள் பார்த்து,  பூசாரி கைக்கூப்பி, தங்கள் மகள் வாய் திறந்து பேச ஆபரேஷன் செய்ய ஒரு லட்சம் ரூபாய் தேவைப் பட்டதால்தான், தான் இப்படி செய்ததாகக் கூறி, காலில் விழுந்து விட்டார். .

அப்பொழுது, அங்கிருந்த ஒரு பெரியவர் ‘கடவுள் விளையாட்டைப் பார்த்தீர்களா? வாய் பேச முடியாத பூசாரி மகளைப் பேச வைத்து, பூசாரியை மன்னித்துவிட்டார். , நாம் யார் பூசாரியைத் தண்டிக்க”  என்று கூற எல்லோரும் ஒத்துக் கொண்டனர்*

190 words

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன