
ஒவ்வொரு முறையும் குடங்களை எடுத்துக்கொண்டு மூன்று பேர்களும் பக்கத்து ஊரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவது வழக்கம். அவர்கள் வசிக்கும் ஊரில் தண்ணீர் இல்லை. முத்தழகி தன் பெண்ணையும் அவளுடன் அழைத்துக்கொண்டு வருவது வழக்கம். பெண்ணைத் தனியாக வீட்டில் விட்டு வருவதை விரும்பவில்லை.
இந்தமுறை அவர்கள் ஊரில் நடந்த குஞ்சானின் தற்கொலையைப் பற்றிப் பேசியபடி வந்தார்கள்.
மூவருக்கும் அந்தத் தற்கொலை நியாயமில்லை என்று பட்டது.
“ஏன் இந்தக் குஞ்சான் இப்படிப் பண்ணினான்” என்று கேட்டாள் பிரேமா.
“அது தானே. அந்நியாயம்,” என்றாள் பார்வதி.
“பண்ணையாருக்கு குஞ்சான் மரணம் பெரிய அதிர்ச்சியாக இருக்கும்,”என்றாள் முத்தழகி.
குஞ்சான் ரதி என்ற பெண்ணைக் காதலித்து வந்தான். அவள் அவன் காதலை ஏற்றுக்கொள்ளவில்ல. அவன் முரட்டு அசாமி, லட்சணமாக வேறு இருக்கமாட்டான். என்னமோ அவனை ஏற்றுக்கொள்ளவில்லை ரதி.
வாழ்க்கையின் எல்லைக்குப் போய்விட்டான் குஞ்சான்.
முட்டாள். முட்டாள் என்று திட்டிக் கொண்டே அழுது கொண்டிருந்தார் பண்ணையார்.
102 words
