
அனிதா தன் தகப்பன் முனியனிடம், “அப்பா இன்னிக்கு சாயந்தரத்துக்குள் ஃபீஸ் கட்டலைண்டா பரிட்சை எழுத விடமாட்டாக, 500 ரூவா வேணும் கண்டிப்பா 4 மணிக்குள்ளே ஸ்கூலுக்கு கொண்டாந்திரு.
முனியன் தெரிஞ்ச எல்லாரையும் கேட்டுப் பாத்தான் ஒரு 10 ரூவா கூடத் தேறலை என்ன செய்றதுனு கைப்பிசைஞ்சிட்டு நின்னான்.
அப்ப வீட்டு வாசல்ல ஒரு பண்டாரம் வந்து நின்னார்,”அய்யா ரொம்ப பசிக்குது ஏதாவது சாப்பிடக் கொடுப்பா புண்ணியமா போகும்.”
“போய்யா நீ வேற என் தேவைக்கு என்ன செய்யனு தவிக்கறேன், வீட்ல ஒண்ணுமில்லை போயிட்டு வா”
“இந்த வாழைமரம் இருக்கே குலை தள்ளிட்டு, ரெண்டு பழம் பறிச்சு கொடேன்.”
முனியனின் முகம் பிரகாசமானது இருப்பானு மரத்திலிருந்து குலையை அறுத்தான் இரண்டு பழம் ஆண்டிப் பண்டாரத்துக்கு, மீதிக் குலை சைக்கிள்ல வச்சு கொண்டு போய் நகரத்து சந்தைல நல்ல விலைக்குப் போச்சு அனிதாவுக்கு ஃபீஸ் கட்டியாச்சு
