சசிகலா விஸ்வநாதன்/நற்கதியைத் தந்தருளும் நம்பு

(1)
விற்புருவம் காட்டி வினையறுக்ககும் கோமான்;

உற்பாதம் களைந்து உன்னை மேடேற்றுவான்;

ஏற்றுக் கொள், என் சொல்லை;

நற்கதியைத் தந்தருளும் நம்பு.
🏵️

(2)
உப்புற்ற பானை இதென அறிந்தும்

சப்பற்ற வாழ்வில் மெப்புற்றது ; ஏன்?

தப்பற்ற வாழ வழி காட்டுமிறை;

நற்கதியை தந்தருளும் நம்பு.
🏵️

(3)
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்;

என்ற பயம் கொண்டு வாழ்வில்,

தற்பெருமை தவிர்த்து இருக்க, தெய்வம்

நற்கதியைத் தந்தருளும் நம்பு.
🏵️

(4)
முக்காலமும் பெற்றோரைப் பற்றி நடக்க;

எக்காலமும் உனக்கு உயர்வின்றி வேறில்லை.

எல்லாமுமாகி நிற்கும் மறையின் கூற்றிது.

நற்கதியைத் தந்தருளும் நம்பு
🏵️

(5)
பாரெங்கும் சுற்றி வந்தேன் நான்.

வேறு எங்கும் காணேன் நான்.

அறம் வளர்க்கும் நாடிது, பரம்

நற்கதியைத் தந்தருளும் நம்பு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன