தமிழ்ச்செல்வன்/கரிச்சிக் கொட்டியவர்கள்

” ஏட்டி காமாச்சி நாம கரிச்சிக் கொட்டிட்டிருந்தோமே மீனாச்சி மவ எளமதிய அவா சரியா படிக்காம ஓட்டப்பந்தயம், தாண்டுறதுன்னு சுத்திட்டிருந்தான்னு ஞாபகமிருக்கா?”

” ஆமான்டி என்னாச்சி சுருக்கமா சொல்லித் தொலையேன் தண்ணீ பிடிச்சிட்டு ராவுக்கு சமைக்கணும்.” எனப் படப் படத்தாள் சரஸ்வதி குரலில் அவசரத்தைக் காட்டி.

” ஆமா… எளமதி ஆளயே காணோமே ரொம்ப வருஷமா, எங்க போயி தொலைஞ்சாளாம்?” இது காமாட்சி.

” என்னமோ வெளயாட்டுக்குன்னு விடுதி படிப்புல்லாம் இருக்குதாம். அங்ஙன படிச்சிட்டே வெளாண்டாளாம். இப்பப் பாத்தா, நம்ம நாடு சார்பா வெளிநாட்டுக்குல்லாம் போயி நூறு மீட்டர் ஓட்டத்தில தங்கப் பதக்கம்லாம் வாங்கிட்டாளாம். நேத்து டிவில கூடப் போட்டாஹளாம். நமக்குத்தான் தெரியாம போச்சு. அரசாங்கம் முப்பது லட்சம் ப்ரைஸூ கூடக் குடுக்குதாம். நாமதான் ஒன்னுந் தெரியாம இருக்கோம். இனிமேட்டு நம்ம பசங்க நல்லா வெளாண்டாங்கன்னா பள்ளிக்கூடத்தில் சொல்லி மேலே என்ன செய்யலாமென்று கேக்கணும்.நாட்டுக்காக வெளாடுறதுன்னா சும்மாவா. நம்ம கிராமம் பேரு கூட டிவில வந்ததாம். மீனாச்சி கூட டிவில பேசுனாளாம். ம்ம் நாமளும் இருக்கோமே. இதெல்லாம் தெரியாம எளமதியைத் திட்டிட்டிருந்தோம்.”

புலம்பிக் கொண்டே மூவரும் தண்ணீர் பிடிக்க நடக்கத் தொடங்கினர்.

123 words

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன