சுதா கணபதி/குடங்கள்

“என்னங்கடி சரசு,  மங்கா ரெண்டு பேரும் காலங் காலையில சீவி சிங்காரிச்சுகிட்டு  குடத்தோட  கிளம்பிட்டீங்க ?  இன்னக்கி பொதன் கிழம தானே ;   மூணு மைல்  தள்ளி  இருக்கற மேச்சேரி  கிராமத்து நல்ல  தண்ணி கிணத்துல நம்மூரு ஜனங்கள வெள்ளிக் கிழமை தானே தண்ணி சேந்த  உடுவாங்க ?

“இவ என்னடி ஊரு நடப்பு தெரியாத  மக்கா  இருக்கா  “நீட்டி முழக்கிய மங்காவக்  குழப்பத்தோடு  வள்ளி பார்த்தாள்.

“ குடும்பத்தோட கொழுந்தன் ஊருக்குப் போயிட்டு  நேத்து ராவுதான்  திரும்பினோம் .  வெவரத்த  சொல்லு. ”

” ஆளும் கட்சி  செல்வம்  நம்ம ஊருக்கு   வோட்டு கேட்டு வர்றாராம். ஊருக்குள்ள  நல்ல தண்ணி கெணறு தோண்ட ஒத்துக்கிட்டாத்தான்  அவர ஊருக்குள்ள விடப்போறாங்க.”

“அம்புட்டு பொம்பளைங்களையும்  ஊரு எல்லைல  கவுத்துப் போட்ட கொடத்து மேல உக்காந்து மறியல் பண்ண  செல்வி அக்கா சொல்லி   இருக்கு “ சரசு விளக்க  “ செத்த நில்லுங்க  நானும்   சேல மாத்திக்கிட்டு தலைய சீவிட்டு  குடத்தோட வந்துடறேன். மறியல்னா   டி வி  காரங்கா எல்லாம் படம் புடிப்பாங்க “என்றபடி வீட்டை நோக்கி ஓடினாள் வள்ளி.

131 வார்த்தைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன