எம்.எல்.பிரபா/உளவுத்துறை

மல்லிகாவின் மருமகள்கள் பொன்னி, வள்ளி, தங்கம். அந்தக் குடும்பம் ஒரு கூட்டு குடும்பம். மாமியாரைப் பற்றிப் பேசுவதற்கு ஏராளமான தகவல்கள் அவர்களுக்குள் இருக்கின்றன. எனவே அந்தக் கிராமத்து குளத்தில் தண்ணீர் எடுக்கப் போகும்போது தான் மாமியாரை பற்றி அவர்கள் பேசுவார்கள். தங்களுக்குள் உள்ள ஆற்றாமையை அவர்கள் தீர்த்துக் கொள்வார்கள். இதை அறிந்த மாமியார் மல்லிகா தன்னுடைய மகள் வழி பேத்தி பேபியை அவர்களுடன் உளவு பார்க்க அனுப்பினாள். இப்பொழுது குளத்திற்கு முன்பு மூன்று மருமகள்களும் மாமியாரைப் பற்றிப் பேசத் தொடங்கி விட்டார்கள். உளவுத்துறை பேபி அதைப் பாட்டியிடம் சொல்லக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். இது அவர்களுக்குத் தெரியாது. வீட்டிற்கு போனால் தான் தெரியும், என்ன வெடிக்கிறது என்று.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன