முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /ஈரக் கனவு

ஆடி மாத மாலை. வயல்வெளி பொன்னிறமா மின்னுது. குளத்தில் தண்ணி எடுத்துட்டு மூன்று பெண்களும் தலையில் குடத்தோடு நடந்து போறாங்க.

“என் மகன் பத்தாவது படிக்கிறான்”னு குப்பாயி சொன்னா. “நல்லா மார்க் வாங்கி கலெக்டர் ஆகணும்னு ஆசை.”

“எனக்கும் அதே ஆசைதான். கலெக்டர் இல்லைன்னா டாக்டர் அதுமாதிரி ஆயிடணும்.உனக்குத்தான் தெரியுமே.என் பையனும் அதே கிளாஸ் தான்”னு பொன்னி சொன்னா. “நம்ம கஷ்டம் எல்லாம் இனி முடியணும். வாழ்க்கை வளமாகணும்.”

“ஆமா”னு மாரியம்மா தலையாட்டினா. “அவங்க படிச்சு மேல வந்தாத் தான் நம்ம குடிசைக்கும் வெளிச்சம் வரும்.”

பாவம். பெண் குழந்தையை வீட்டில் தனியே விட்டு விட்டு வர முடியாமல் அவளையும் கூடவே இழுத்துக் கொண்டு வந்திருந்தாள் அவள்.

அப்போ தான் கருமேகம் சூழ்ந்தது. சடசடன்னு மழை.

“ஓடுங்கடி குடிசைக்கு!” மூன்று பேரும் ஓடினாங்க.

உள்ள போனால் கூரை ஒழுகுது. அவசரமா மகன்கள் பள்ளிக்கு எடுத்துப் போன புத்தகங்கள் தவிர மத்த நோட்டுகளையும் புத்தகங்களையும் பிளாஸ்டிக் பையில போட்டு மூடி வச்சாங்க.

நனைஞ்ச கையோட மூன்று பேரும் ஒரே குரல்ல சொன்னாங்க, “நாம நனைஞ்சாலும் பரவால்ல… புள்ளைங்களோட எதிர்காலம், கனவு மட்டும் பாழாகவே கூடாது.”

127 words

2 Comments on “முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /ஈரக் கனவு”

  1. இந்த குட்டி கதையில கூட அருமையான ஒரு கருத்தை வலியுறுத்தி இருக்கீங்க.. வருங்கால சந்ததிக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை வாழ்த்துகள் சிவகாமி மா

Comments are closed.