
“ அடியே இந்தக் கூத்த கேட்டியகளா? நம்ம பேச்சிமுத்து யாரோடையோ ஓடிப் போயிட்டாளாம்,” வள்ளி கூறியதை கேட்டதும்,
“ அடி ஆத்தி அவளுக்கு வளந்த பிள்ளைங்க ரெண்டு இருக்கே?” பொன்னுத்தாயி அங்கலாய்த்தாள்.
“ அவ சரியான மேனாமினிக்கி. எனக்கு ரொம்ப நாளாவே அவ மேல சந்தேகம்” ஒத்தூதினாள் செண்பகம்.
“ அவ என்ன மினிக்கி என்ன பிரயோசனம். அவ புருசன முந்தானைல முடிச்சுக்க தெரியலையே?” வள்ளி தொடர்ந்தாள்.
“ அவ என்ன பண்ணுவா? அவ புருசன் தெனமும் குடிச்சுட்டு வந்து குப்புற அடிச்சு படுத்துட்டானா ?அவளும் இளம் ரத்தம் தானே. வீட்ல தீனியில்லாட்டி வெளியில மேயத்தானே போகணும்?”
“ஏய் செம்பகம் பொண்ணுத்தாயி கூட அவ பொண்ணு மல்லிகா இருக்கு. பாத்துப் பேசு”
“ அது சின்னப் புள்ள. அதுக்கு ஒன்னும் புரியாது. மல்லிகா நாங்க பேசறதயெல்லாம் காதுல போட்டுக்காதே சரியா?”
மல்லிகா மனதுக்குள், ‘ செண்பகம் அக்கா எனக்கு எல்லாம் தெரியும். அந்தப் பேச்சிமுத்து ஓடிப்போனதே ஒம் புருசன்கூடத்தானே” என்று நினைத்துக்கொண்டே தலையாட்டினாள்.
(110 words)
