
(1)
புவனம் அனைத்தையும், அண்டம் அனைத்தையும்
இயக்காதவன் போல் இயக்கும் இறை!
உயிரனைத்திற்கும் மெய்மையும் அறிவையும் அருளும்
சிவனே! போற்றி! போற்றி!
🕉️
(2)
அகத்தில் கருமை புறத்தில் வெண்மையென
மண்புழுதி களத்தில் புரண்ட கோவேறு கழுதையென்னும்
பொய்யரிடம் சரண் புகாமல், சொல்லுவீர்!
சிவனே!போற்றி ! போற்றி!
🕉️
(3)
சிவாய வசி என்று ஓத,
சித்திகள் அனைத்தும் மெய் அகப்பட,
ஈசனிடம் ஒன்றிட; சொல் நீ,
சிவனே!போற்றி! போற்றி!
🕉️
(4)
அறிவொளியை உயிரொளியில் ஆகுதி செய்வீர்.
அரவணிந்தோன், அறவோனவன் பாதம் காண்பீர்.
இறையொளியைக் கண்டு நீர் இயம்புவீரப்போது;
சிவனே! போற்றி! போற்றி!
🕉️
(5)
இறைவனே நான்! இறைவனுரு நான்!
என்பவர் எல்லாம் இறையுரு காட்டும்
பொய்யுரு தவத்தாரவரை நம்பாமல், விளம்புவீர்!
சிவனே! போற்றி! போற்றி!
