
“அப்ப்ப்பா வெயில் மண்டையை பொளக்குது, குடத்துடன் வெளியே வந்தாள் செவ்வந்தி . கூடவே மகள் கனகாவும்.
அலமேலுவும், ராசாத்தியும் சேர்ந்து கொண்டனர். மூவரும் ஊர் கோடியில் இருந்த கிணற்றங்கரைய நோக்கி நடந்தனர். அந்த ஒரு கிணற்றில் தான் தண்ணீர்.
“ராசாத்தி எங்கக்கா வூட்டில குழாய தொறந்தா தண்ணி கொட்டுது. நாம ஒரு குடம் தண்ணிக்கு காத தூரம் அலையறோம்.
“அது சரி உங்க ஆத்தா உன்னை மட்டும் எதுக்கு இந்தப் பாலை வனத்துல கட்டிக் கொடுத்தா”
“தம்பி பேருல உள்ள பாசம். அப்பத்தா படுத்துற பாடு கொஞ்சநஞ்சமில்ல.
‘ராப்பிறந்த பிள்ளையும் ஆவாது பகல் பொறந்த பிள்ளையும் ஆவாது.’
அக்கம் பக்கம் ஆருகிட்டயும் பேச விடாது.’எட்டிப் பாக்கக் கூடாது எதித்து முழிக்கக் கூடாது’. திகாரு செயிலுதான்”
“செவ்வந்தி நாங்க மட்டும் என்ன குடிக்கிற புருஷன்கிட்ட அடி வாங்கிட்டு தான் காலத்தைக் கழிக்கிறோம். நாம தண்ணி எடுக்கப் போற இந்த நேரம் தான் சந்தோசமான நேரம்”
வெப்பம் காலில் சுட்டாலும் மனதில் சந்தோஷம்.
அவர்கள் பாலைவன வாழ்க்கையில் சோலையே தண்ணீர் எடுக்கப் போகும் அந்த நேரம்தான். மூவரும் சிரித்த சிரிப்பில் குடத்தில் இருந்த தண்ணீர் கொஞ்சமும் சிந்திவிடாதபடி கவனமாக நடந்தனர்.
(words 129)

யதார்த்தமான கதை. வாழ்த்துகள்.
மிக அருமை.
சிறப்பு சகோதரி