அழகியசிங்கர்/சிவனே போற்றி போற்றி

1
நான் வணங்கும்
கடவுள் சிவன்தான்
என் கனவிலும்
சிவன்தான் வருகிறார்
என் பெயரில்
சிவன் ஒளிந்திருக்கிறார்

சிவனே போற்றி போற்றி

2.

எப்போதும் வேண்டுவதில்லை
தேவையானபோது
தேடுகிறேன்
பயம், கவலை
சூழும்போது சிவன்
படுக்கப் போகும்போது
ஒருநிமிடம் நினைக்கிறேன்

சிவனே போற்றி போற்றி

3.

இப்போதெல்லாம்
கோயிலுக்குப்
போவதில்லை. ஆனால்
பயம் வந்தால்
கோயிலுக்கு ஓடுவேன்
வணங்கத் தெரியாமல்
உருகி வணங்குவேன்

சிவனே போற்றி போற்றி

4.

அமைதியின் வடிவம்
சிவன் கோயில்
கண்ணை மூடி
ஒருநிமிடம் இருந்தால்
போதும். எல்லாப்
பலனும் கிட்டும்

சிவனே போற்றி போற்றி

5.
நான் செய்யும்
எல்லா காரியமும்
சிவனுக்கு அர்ப்பணம்.
அப்படி வேண்டிக்
கொள்வதில்லை
இயல்பாய்க் கடவுளைத்
தேடுவதில்லை

சிவனே போற்றி போ

2 Comments on “அழகியசிங்கர்/சிவனே போற்றி போற்றி”

  1. ஒரு நிமிடம் அவன் தாள் வணங்கினால் போதும் நம் மனதின் அலைகள் ஓயும்.
    ‘வணங்கத் தெரியாமல் உருகி வணங்குவேன்’ அருமை.

  2. சிவனே போற்றி போற்றி — எண்பா
    கங்கை முடிமேல் அணிந்த கயிலைநாதா
    கண்ணில் கருணை பொழியும் பரஞ்சோதி
    எங்கள் துயரங்கள் யாவும் களைந்தருள்வாய்
    சிவனே போற்றி போற்றி
    நீலகண்டனே நின்ற நிறைமூர்த்தி
    நீறணி மேனியாய் நின்ற பெருமானே
    நாதமும் வேதமும் ஆன நற்றுணையே
    சிவனே போற்றி போற்றி
    முக்கண்ணனே மூவுலகைக் காக்கின்ற
    முழுமுதற் பொருளே முதல்வா சிவனே
    அக்கினி போல அறியாமை போக்குவாய்
    சிவனே போற்றி போற்றி
    அம்பலத் தாடும் ஆனந்தக் கூத்தனே
    அடியவர் நெஞ்சில் அமர்ந்த அருட்சுடரே
    எம்பெருமானே எனக்கருள் தந்தருள்வாய்
    சிவனே போற்றி போற்றி

Comments are closed.