வி.பிரபாவதி/ஊர் வம்பு

தினமும் தண்ணீர் எடுக்கப் போகும்பொது வேலாயி, வீராயியுடன் புஷ்பாவும் அவள் மகளும் கூடச் சேர்ந்து கொள்வார்கள். 

புஷ்பாவிற்கு யாரைப்பற்றியாவது வம்பு பேச வேண்டும். இவர்கள் இருவரும் வேண்டாம் என்று நினைத்தாலும் எப்படியோ வந்து விடுவாள்.

அன்றைக்கு வேலாயி ஒரு முடிவுக்கு வந்தாள்.  ஊர்வம்பு பிடிக்காததால் வீராயிகிட்டயும் முன்னரே சொல்லிவைத்து    “தண்ணி இருக்கு, இன்னிக்குப் போகவில்லை என்று சொல்லிவிட்டனர்.

புஷ்பா வேறு சிலருடன் போகும்போது இவர்கள் இருவரைப் பற்றிப் புறம் பேசினாள்.  “தினமும் போகிற அவங்களப் பத்தியே இவ்வளவு பேசறியே? எங்களப் பத்தியும் பேசியிருப்பியே,  இனிமே எங்களோட வராத.  யாரையும் பத்தி எங்களுக்குத் தெரிஞ்சுக்க வேண்டாம்” என்றவாறு சற்று தள்ளி நடந்தார்கள். 

74 words

One Comment on “வி.பிரபாவதி/ஊர் வம்பு”

Comments are closed.