ஹரணி/சிவனே போற்றி போற்றி

1)
பிறவா யாக்கைப் பெரியோனே பேரருளே
பிறந்த என்பிறவி காத்திடும் பெரியோனே
ஆதியும் அந்தமும் இல்லா நாயகனே
சிவனே போற்றி போற்றி.
(2)
காலம் முழுக்க வேண்டி நிற்பேன்
காலம் முடிய காத்து கொடு
காலம் எல்லாம் நிற்பவனே கருணையே
சிவனே போற்றி போற்றி.
(3)
புவனம் முழுதும் காக்கும் பேரறிவே
கவனம் முழுக்க நிற்கும் உயிரே
ஐவகை நிலமும் ஆர்க்கும் இறையே
சிவனே போற்றி போற்றி.
(4)
தீங்கு அழிப்பாய் செய்வினை ஒழிப்பாய்
பங்கம் இன்றிப் பல்லுயிர் நிறைவாய்
வங்கக் கடலாய் ஆழ்ந்த பொருளே
சிவனே போற்றி போற்றி.
(5)
பணப்பேய் விழுங்கும் ஆணவம் தூர்க்கும்
குணத்தைக் கொள்ளும் நல்லறிவை நினைக்கும்
பொல்லார் பொசுக்கி நல்லார் எண்ணும்
சிவனே போற்றி போற்றி

தஞ்சாவூர்-

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன