ருக்மணி வெங்கட்ராமன் /நிறைந்த மனம்

“செவ்வந்தி.! தண்ணீருக்காக எத்தனை தூரம் நடக்க வேண்டி இருக்கு.”

“ஆமாம் தாமரை.! தண்ணீர் கொஞ்சம் கூடச் சிந்தாம வீட்டுக்கு எடுத்துப் போகணும்.”

“உள்ளே நுழைஞ்ச உடனே, என் மாமியா, ‘இத்தனை நேரமா ஒரு குடம் தண்ணி கொண்டார?’ என்று கத்துவா.” ஆதங்கத்துடன் கூறினாள் மல்லி.

“சரி. இந்த ரோசா குட்டி எதுக்கு நம்ம கூட வந்திருக்கு?”

“நான் பக்கத்து வீட்டு பாட்டிக்காக வந்திருக்கேன். அவங்களால இம்புட்டு தூரம் நடக்க முடியாதில்லை.”

தண்ணீர் குடத்துடன் வந்து கொண்டிருந்த பெண்களிடம் “தாயிங்களா.! எனக்குக் கொஞ்சம் தண்ணீர்  கொடுங்களேன். தாகமா இருக்கு.”என்று ஒரு பாத்திரத்தைக் காட்டினார்.

“தாத்தா.! குடிக்க ஒரு பெரிய பாத்திரத்தில் கேட்கறீங்க. நாங்களே அவ்வளவு தூரம் போய் வாரோம். ஏதோ ஒரு டம்ளர் என்றால் பரவாயில்லை.”

“தாத்தா. இந்தாங்க என் குடத்திலிருந்து ஊத்தறேன்.”

“நல்லா இரு தாயி. என் பொண்டாடிக்கும் எனக்கும் போறும்.”

ரோசாவின் மனம் மகிழ்ந்தது.

மற்றவர்கள் எதுவும் கூறும் முன்பு, ரோசா வந்த பாதையில் நடக்க ஆரம்பித்தாள் குடத்துடன். அடுத்த வீட்டு பாட்டிக்குத் தண்ணீர் கொண்டு வர.

வார்த்தைகள் 120

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன