தண்ணீர் / அப்புசிவா

“எப்போ போவாங்களாம்” கேட்டாள் தாமரை.

“காலையில இருந்து இருக்காங்களாம்” என்றாள் மல்லிகை.

“வழி மறிச்சு கேட்கறாங்களாம்” சோகமாகச் சொன்னாள் முல்லை.

நிஜமாகவே வழியை மறித்து இருந்தது அந்த மாட்டு மந்தை.

அதைக் கடந்து வருபவர்களின் குடங்கள் அரையாகத் தளும்பியிருப்பதையும் பார்த்தார்கள்.

“அதுங்களும் பாவந்தானே” சொன்னாள் குழந்தை செம்பருத்தி.

பெருமூச்சுடன் நடந்தார்கள்.

ஐந்துமைல் கடந்து மொண்டு ஊற்றிய அமிர்த நீருடன் திரும்பினார்கள்.

ஆளுக்கு அரைகுடம் மந்தை ஆட்களிடம் தந்தார்கள்.

“தண்ணி இல்லாம தவிச்சு கெடக்குதம்மா ஜீவன் எல்லாம். பதிலாக

இந்த மாசம் எல்லாம் பால் முழுக்க

உங்களுக்கு சும்மாவே தரேன்மா” என்றார்

மந்தை முதலாளி கண்ணீருடன்.

(70 words)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன