சுஸ்ரீ/வலை வலையா பேச்சு

சரு,”இன்னிக்கு இவ்வளவுதான் புடிச்சிருக்கான் என் புருஷன், பெரிசா புது போட், மோட்டார் வச்சது எங்கப்பன் கொடுத்து என்ன பிரயோசனம்”
மீனு,”போட் புதுசா இருந்தா போதுமா, சரியான வலை கிடைக்காட்டா,இது கிடைச்சதே அதிகம்”
“என்ன பேச்சு வேற விதமா போவுது, எதையோ குத்திக் காட்டற மாதிரி தெரியுதே”
மீனு மெதுவா முனகினாள்,”புரிஞ்சிக்கிட்டா சரி”
மீனுவும், சருவும் உறவுதான் ஒருவிதத்துல அக்கா தங்கச்சி முறை.அந்தக் கடற்கரை குடிசைகளில் சிறு வயது முதல் ஒன்றாய் வளர்ந்த மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.இருவரும் பருவ வயதில் ஒத்தருக்கு தெரியாமல் ஒத்தர் காத்தானை விரும்பினார்கள்.
முந்தினது சருவின் தாய், தகப்பன், காத்தானின் பெற்றோரிடம் பேசிக் கடற்கரை காளி கோவில்ல கல்யாணம் கட்டி வச்சிட்டாக.
மீனு, சருவை விட நிறம், உயரம், அழகு கொஞ்சம் அதிகம்தான், அவ இந்தக் காத்தான் தன்னைதான் கட்டுவான்னு மிக நம்பிக்கைல இருந்தா.மோட்டார் போட், காட்டி சருவை கட்டி வச்சிடுவாங்கனு எதிர் பாக்கலை.
கல்யாணம் முடிஞ்சு போச்சு.போட் வாங்கிக் கொடுத்த பெரியப்பன் சரியான வலை கொடுக்கலையே.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன