வி.பிரபாவதி/அங்கம்மாவும் செங்கம்மாவும்

இருவரும் சிறுவயது முதலே தோழிகள்.   மீனவக் குடும்பத்தில் பிறந்து நிறைய கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தவர்கள்.

மழையிலும், வெள்ளத்திலும் அல்லாடும் வாழ்க்கைதான்.  பழகிப்போயிற்று.

பள்ளிக்கூடம் போனாலும் படிப்பு ஏறவில்லை.  ஐந்தாம் வகுப்போடு சரி.

“என்னாடி, நெதமும் வேகாத வெய்யிலானாலும், மழையினாலும் நம்ம யாவாரம் செஞ்சாதான் சோறு” அலுத்துக் கொண்டாள் அங்கம்மா.

“ஆமாடீ, நம்ம பொயப்பு அப்டிக்கீது.  நாளைக்கு மறுநா மாப்பிள்ளை வீடு பாக்க வர்ராகன்னு சொன்னியே, பையன் படம் எதுவும் பாத்துக்கினியா?  ஷோக்காக்கிரானா?” கேட்டாள் செங்கம்மா.

“இன்னாடி மாப்பிள்ளை, வலையப்போட்டு மீனு புடிக்கிறவன்ந்தேன்.  கலியாணம் முடிஞ்சு ஒரு வாரம் செண்டா, நானு ஒங்கோட வியாபாரம், அவன் டவுசரப் போட்டுக்கினு கடலுக்குள்ள போவான்.  உசுரோட திரும்பி வாரானுன்னுக் காத்துக்கெடக்கோனும்.  அப்பங்கிட்ட கலியாணம் வாணாங்காட்டியும்னு  தீ(ர்)த்துச் சொல்லிப்புட்டேண்டி.

“வாம்மா, வாய்யா, ஓங்கையால யாவாரம் பண்ணுங்க ” வியாபாரத்தைத் தொடர்ந்தாள் அங்கம்மா.

(91 words)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன