
அதிகாலையில் சிறுசலசலப்பு
பூபாளத்தில் ஆரம்பித்து
நீலாம்பரியில் ஆலாபனை
காதம்பரியில் சொற்கள்
“அவ”ரோகணம் தொடர்ந்தது
ஆரோகணம் உச்சம் தொட்டு
அமிர்தவர்ஷியல் அழுகை
அடாணா படுத்தும் பாடு
ஆனந்தபைரவியில் நனைந்தேன்
ஆபோகியில் முடிந்தது
ராகமாலிகா கச்சேரி
உச்சஸ்தாயியை தொட்டது
மேளகர்த்தா தொடங்கும்முன்
சம்பூர்ணம் பாடும்போது
நட்டுவானார் இல்லாது
நாட்டியம் ஆடினேன்

Super
Sabhash Suresh.
அனைத்து ராகத்தையும் கவிதை பாடிய நீவீர்
இனிய ராகம் ரஞ்சனியை தவிர்தது ஏனோ?
அருமை ஆனாலும் ரஞ்சனியை சேர்த்திருந்தால் பெருமையாய் இருக்கும்