ஓயாமல் தரைத்தட்டும்/செ.புனிதஜோதி

மனம் வலித்தது
ஓயாமல் தரைத்தட்டும்
குழந்தையின் பாதம்

முதல் அடியிலே
கிச் கிச் மூட்டியது
தரைக்கும் குழந்தைக்குமான
விளையாட்டு

தடுமாறிய மலரை
அடிபடாமல் தாங்கிக் கொண்டது
தரை

மிதித்து ஏறும்
வெண்மஞ்சு
உமிழ்நீர் ,சிறுநீரால்
மழை

நவரசத்தைக் கற்றுத் தருகிறாள் கலைமகள்
தொட்டிலில் தூங்கும்
நிலவுக்கு

உத்திரம் தொட்டில்
கயிற்றால் கொடிக்கம்பம் ஏற்றிய
உற்சாகம்

தொடை மெத்தையானது
தோள் சாய்வு நாற்காலியானது
அங்கங்கள் பெற்றன
நுண்புல அறிவு

வீடு வனத்தை
அழைத்துவந்தன
குழந்தையின்ஒலி

ஊமைச் சுவர்கள்
குழந்தையின்
கிறுக்கலில்
பேசப்பழகும்

நிறைந்த வீட்டின்
அடையாளமொழி
குழந்தை

2 Comments on “ஓயாமல் தரைத்தட்டும்/செ.புனிதஜோதி”

Comments are closed.