
முனியம்மாவும், முத்தம்மாவும் மாமியார் மருமகள் உறவுக் கொண்டவர்கள். நேற்று வலை விரித்துப் பிடித்து மீன்களை எல்லாம் கூடை நிறைய போட்டு இருக்கிறார்கள். ஆனால் இன்று யாரும் வாங்குவதற்கு தயாராக இல்லை. அன்றாடம் இவர்கள் மீனை விற்றுத்தான் தங்கள் பிழைப்பினை கடத்த வேண்டும் ஆனால் இன்று ஆடி அமாவாசை. அதனால் எல்லோரும் வெஜிடேரியனாக மாறிவிட்டார்கள் போலிருக்கிறது.
யாராவது மீனை வாங்க வருவார்களா என்று மாமியாரும் மருமகளும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்போம் இன்று மாலைவரை என்ன நடக்கிறது என்று? கடவுள் விட்ட வழி தான் !
(69 words)
